சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்தார்!

-ஊடகப்பிரிவு-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளிகளில் ஒருவரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான, காத்தான்குடியைச் சேர்ந்த அல்ஹாஜ் ரீ.எல்.ஜவ்பர்கான் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார்.

இவர் தலைவர் அஷ்ரபுடன் இணைந்து, முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டதுடன், 2011 நகர சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளராக போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.