இலங்கை கனிய மணல் நிறுவனத்தின் புதிய உயரதிகாரிகளின் கடமை பொறுப்பேற்றல் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு-

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான இலங்கை கனிய மணல் நிறுவனத்தின் புதிய தலைவர் திருமதி. இந்திக்கா ரணதுங்க(LLB), முகாமைத்துவப் பணிப்பாளர் றுஷ்தி ஹபீப்(LLB), நிறைவேற்று அதிகாரி தேஷபந்து அப்துல் றஷாக்(நழிமி) ஆகியோர் இன்று  (28) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதுடன், நிறுவனத்தின் அதிகாரிகளுகளுடனான தமது முதலாவது கலந்துரையாடலையும் மேற்கொண்டனர்.