கொஸ்லாந்தை, பூனாகலையூடாக பண்டாரவளைக்கு செல்லும் வீதியில், 3ஆம் மற்றும் 4ஆம் கிலோமீற்றருக்கு இடையில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன் வீதியும் கீழிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அவ்வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்களில் பயணிக்கும் பயணிகள் 3ஆம் மற்றும் 4ஆம் கிலோமீற்றருக்கு இடையில் நடந்து சென்று பஸ்களில் மாறி தங்களுடைய பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.