இலங்கை வான்பரப்பில் பறந்த மர்ம பொருள் வேற்றுக்கிரகத்துக்குரியது என உறுதி?

அண்மையில் பொலன்னறுவை வான்பரப்பில் பறந்த மர்ம சிலந்தி வலை நூல்கள் வேற்றுக்கிரக பொருட்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்தச் சம்பவம் நடைபெற்றிருந்தது. வான் பரப்பு பூராகவும் வெள்ளை நிறத்தில் மிதந்து கொண்டிருந்த இந்த மர்ம சிலந்தி வலை நூல்கள் அதன் பின் ஹம்பாந்தோட்டை பிரதேசத்திலும் ஓரிரு இடங்களில் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இங்கிலாந்து கார்டிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திரா விக்கிரமரசிங்க இது தொடர்பாக ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தார்.