மு.கா ஒலுவில் அமைப்பளர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு-

ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகாலப் போராளியும், ஒலுவில் அமைப்பாளராகவும் செயற்பட்ட அலியார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார்.

மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஜெமீல் முன்னிலையில் இணைந்துகொண்ட அவர், இந்தத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றிக்காக உழைப்பதாகவும், மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.