வவுனியா ஹிஜ்ராபுரத்தில் வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!

ஊடகப்பிரிவு-

வவுனியா மாவட்டத்தின் சாளம்பைக்குளம், இரட்டை வட்டாரத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களான கே.எம்.ரஹீம், என்.பி.ஜவாஹிர் ஆகியோரை ஆதரித்து, ஹிஜ்ராபுரத்தில் கூட்டமொன்று இடம்பெற்றது.

ஹிஜ்ராபுரம், ஆசியன் ஜிப்ஸம் மோல்டிங் தொழிற்சாலையின் உரிமையாளர் மன்சூர் ஆப்தின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மத், ஓய்வுபெற்ற கிராம சேவையாளர் நசார், அயல் வட்டார வேட்பாளர்களான சுரேஸ், கனகா மற்றும் தேசியபட்டியல் வேட்பாளர்களான நவாஸ், நயீம், பழீல் உட்பட  மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும்,  ஊர்ப்பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.