சவூதியில் வாகன விபத்தில் 5 பிள்ளைகளையும் பறிகொடுத்த தந்தை

அபூ ஸமீஹா

சவூதி நாட்டின் (ஜெவ்ப்) பல்கலை கழகத்தின் அதிபருடைய மூன்று ஆண் பிள்ளைகளும்,இரண்டு பெண்
பிள்ளைகளும் நேற்று முன்தினம் (2-11-2014)வாகன விபத்தில் சிக்குண்டு மரணமானார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

நமக்கு பிரியமான ஒருவரை மரணத்திற்கு பலிகொடுக்கும்போது அழுது அல்லாஹ்வை திட்டி
ஆர்ப்பரிக்கும் சில முஸ்லிம்களுக்கு மத்தியில்…

ஐந்து குழந்தைகளை மரணத்திற்கு பலிகொடுத்தும்
அல்லாஹ் நாடியதை பொறுத்துக் கொண்ட
இந்த தந்தையிடம் நமக்கு சிறந்த படிப்பினை உண்டு…!

கொடுத்தவனுக்கு
எடுக்கும் உரிமை உண்டு என்பதை அறிந்து நடப்போம்… இன்ஷா அல்லாஹ்..!

(யால்லாஹ் இவர்களின் பாவங்களை மன்னித்து சுவர்க்கம் நுழையச்செய்வாயாக..!)