நலன்புரி சங்கங்களுக்கு நீர்த்தாங்கிகள் வழங்கி வைப்பு!

-ஊடகபிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில்,  மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் நிதியொதுக்கீட்டில், அனுராதபுர மாவட்டத்தில் உள்ள நலன்புரிசங்களுக்கு  குடி  நீர் தாங்கிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு கலாவெவயில் உள்ள  அலுவலகத்தில் இஷாக் ரஹ்மான் எம்.பியின் தலைமையில் நடைபெற்றது

இன, மத, கட்சி வேறுபாடுகளின்றி நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற ஓர் எண்ணப்பாட்டுடன் ஒன்றிணைந்து நம் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றும், தனது சேவையானது கட்சி வேறுபாடின்றி தான் செய்வதாகவும், தன்னால் முடியுமான  சகல  உதவிகளையும் இறுதிவரை இச்சமூகத்திற்காய் செய்வேன் எனவும் இந்நிகவில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.