நீராவிப்பிட்டி மக்களுக்கான மின்னிணைப்பு வழங்கும் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு-

முல்லைத்தீவு, நீராவிப்பிட்டியில் வசிக்கும் 15 குடும்பங்களுக்கு மீள்குடியேற்ற செயலணியூடாக மின்சார இணைப்புப் பத்திரத்தை, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வடமாகாண சபை உறுப்பினர் ஜனூபர், முல்லைத்தீவு மாவட்ட மீள்குடியேற்ற செயலணி திட்டப் பணிப்பாளர் ரிபாய், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சிறிய கைத்தொழில் திட்டமிடல் ஆலோசகர் மொஹிடீன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.