லிஹினியாகல ரஜமஹா விகாரைக்கு நிதியுதவி வழங்கி வைப்பு!

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து கடுகம்பொல, லிஹினியாகல ரஜமஹா விகாரையின் அபிவிருத்திக்கு  ஆறு இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் மற்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அன்பாஸ் அமால்தீன் ஆகியோர் விகாராதிபதியிடம் இந்த உதவித் தொகையை  கையளித்தனர்.