கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்கின் அறிவிப்புக்கு மக்கள் பாராட்டு!

-ஊடகப்பிரிவு-

கற்பிட்டி பிரதேச சபையின் முதலாவது அமர்வு நேற்று (17) இடம்பெற்றது. இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர் ஆஷிக்  தனக்குக் கிடைத்த முதல்மாத சம்பளத்தினை பள்ளிவாசலுக்கு வழங்கி வைத்தார்.

அத்துடன், எதிர்வரும் 04 வருட சேவைக்காலங்களிலும் கிடைக்கப்போகும் தனது சம்பளப் பணத்தை  மத்ரஸா ஒன்றிற்கு வழங்கப் போவதாக, அந்த விடயத்தினை எழுத்து மூலமாக சபைக்கு அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கற்பிட்டி பிரதேச சபை,  விருதோடை வட்டாரத்தின் உறுப்பினராகிய ஆசிக் மேற்கொண்ட  இந்த நல்ல முயற்சிக்காக,  கற்பிட்டி பிரதேச மக்கள் தமது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சிகளையும் தெரிவித்தனர்.