தொழில் முயற்சியாளர்களுக்கு கைத்தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் – வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும், கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர். ஹில்மி மஹ்ரூபின் வேண்டுகோளுக்கிணங்க,   தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 
தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பல்துறை சார்ந்த  கைத்தொழில் உபரணங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் டாக்டர். ஹில்மி மஹ்ரூப், பிரதேச செயலாளர் திருமதி. ஸ்ரீபதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்  பசூர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.