Breaking
Sat. Dec 6th, 2025

-ஊடகப்பிரிவு-

தர்கா நகர் -வரியிறுப்பாளர் சங்கத்தினர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர்க்கிடையிலான சந்திப்பு பேருவளை நாதா கார்டனில் (17) நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஷீப் மரிக்கார் உட்பட சக உறுப்பினர்கள் பலரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இந்த சந்திப்பில் தர்கா நகர் பிரதேசத்தில் நிலவும் வரி அறவிடுதலில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், குப்பை கூழங்களை அகற்றுவதில்
உள்ள குறைபாடுகள், வாசிகசாலை குறைபாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு என்பன போன்ற பல்வேறுபட்ட குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டதுடன், இந்த விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அது சம்பந்தமான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இவற்றுக்கான தீர்வுகள் சம்பந்தமாக தொடர்ந்து சந்திப்புகளை நடாத்தவும் இதன்போது, முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related Post