Breaking
Sat. Dec 6th, 2025

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிராந்திய அமைப்பாளர்களுக்கான ஒன்று கூடல், கற்பிட்டி அமைப்பாளர் ஆப்தீன் எஹியா தலைமையில்  (20) இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தின் போது, மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் தலைமையின் கீழ், கல்பிட்டி பிராந்தியத்தில் புத்தி ஜீவிகள், உலமாக்கள், இளைஞர்களைக் கொண்ட  ஓர் மத்திய குழுவை உருவாக்கி, அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக நாம், எமது நடவடிக்கைகளை மேற்கொண்டால் நிச்சயம் எமக்கு ஓர் பலமான அரசியலை செய்வதற்கான வாய்ப்பாக அது அமையும் என்ற ஆலோசனையை அமைப்பாளர் ஆப்தீன் எஹியா முன்வைத்தார்.

அதனை அனைவரும் ஆமோதித்தனர். அதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான சகல பொறுப்புக்களும் அமைப்பாளர் அப்தீன் எஹியாவினால்  ஒவ்வொரு அமைப்பாளருக்கும் பிரித்துக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related Post