Breaking
Sun. Dec 7th, 2025

-ஊடகப்பிரிவு-

மன்னார், மாந்தை கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட அம்பாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் கீழ் வீடமைப்பு அதிகார சபையினால் 25 வீடுகளைக் கொண்ட மாதிரிக் கிராமம்  அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா, மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் மகாலிங்கம் நந்தனின் பங்குபற்றுதலுடன் கடந்த வாரம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் கடந்த உள்ளுராட்சி மன்றத்  தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியீட்டி தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர், தவிசாளர் மகாலிங்கம் நந்தனினால்  ஆரம்பித்து வைக்கப்பட்ட முதலாவது வேலைத் திட்டம் இதுவாகும்.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீஸ் கந்தராஜா மற்றும் மாந்தை கிழக்குப் பிரதேச செயலாளர் ரமேஸ், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட மதத்தலைவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சுமார் 25 வீடுகள் அமையப்பெறவுள்ள இம்மாதிரிக் கிராமத்தில் தலா ஒரு வீட்டுக்கு 5.5 இலட்சம் ரூபா செலவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related Post