Breaking
Sun. Dec 7th, 2025

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி தலைமையில்,  வண்ணாத்திவில்லு பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.அனஸ்தீனின் ஏற்பாட்டில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இஸ்மாயில் புரம் கிளை கடந்த திங்கட்கிழமை (30) உருவாக்கம் பெற்றது.

அத்துடன், மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட இளைஞர் அமைப்பாளர் இப்ளால் அமீனின் ஏற்பட்டில், நவவி எம்.பியின் தலைமையில், மக்கள் காங்கிரஸின் புத்தளம் கிழக்குக் கிளை  நேற்று (03) உருவாக்கம் பெற்றது.

புத்தளம் நகரத்தின் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவை மையப்படுத்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதேச அபிவிருத்தி நலனுக்காக  இந்தக் கிளை ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Related Post