புனித செபஸ்தியன் கல்லூரிக்கு மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் விஜயம்!

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான மொஹம்மட் பாயிஸ், கொழும்பு,  புனித செபஸ்தியன் கல்லூரிக்கு  இன்று (09) விஜயம் செய்து, பாடசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் அதிபர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் றம்சி அவர்களும் பங்கேற்றிருந்தார்.