யாழ் மாநகர சபையின் கல்வி, விளையாட்டு மற்றும் மேம்பாட்டு நிலையியல் குழு உறுப்பினராக கே.எம் நிலாம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், யாழப்பாணம் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் கல்வி, விளையாட்டு மற்றும் மேம்பாட்டு நிலையியல் குழு உறுப்பினராக யாழ் மாநகர சபை முதல்வர் திரு.அர்னோல்ட் அவர்களினால் நியமிகப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த உறுப்பினர் நிலாம்,

இதன் மூலம், யாழ் மக்களுக்கு சிறந்த முறையிலான கல்வி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும். அத்துடன், இளைஞர்களின் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்கான சகல வசதிகளையும்  நாம் மேற்கொள்வோம்.

அத்துடன், பிள்ளைகளின் கல்வி மற்றும் விளையாட்டுத் திறனை தேசிய மட்டத்தில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளையும்,  யாழ் மாநகர சபை முதல்வரின் உதவியோடு நாம் முன்னெடுப்போம் என்றார்.