Breaking
Sun. Dec 7th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், இஷாக் ரஹுமான் எம்.பியின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அனுராதபுரம், கெப்பிதிகொல்லாவ பிரதேச சபைக்குட்பட்ட ஏக்கர் ஐந்து எனும் கிராமத்தில், பொதுமக்கள் பாவனைக்காக மக்கள் மண்டபம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கெப்பித்திகொல்லாவ பிரதேச சபை உறுப்பினர் இப்ராஹீமின் வேண்டுகோளுக்கிணங்க நிர்மாணிக்கப்பட்ட இந்த மக்கள் மண்டபத்தின் திறப்புவிழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பிரதம அதிதியாகப் பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார்.

இந்நிகழ்வின்போது, அப்பிரதேசத்தைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகம் ஒன்றிற்கு, விளையாட்டு உபகரணங்களும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகஹ்மானின் சொந்த நிதியிலிருந்து வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(ன)

 

Related Post