கலாவெவ பாடசாலை மைதானத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  பிரதித் தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுனின் முயற்சியில்,  அனுராதபுரம், இப்பொலோகாம பிரதேச சபைக்குட்பட்ட, கலாவெவ மத்திய கல்லூரியின் மைதானத்தை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடல்,  நேற்று (17)  பாடசாலையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், இஷாக் ரஹுமான் எம்.பி, மக்கள் காங்கிரஸின் இப்பொலோகாம பிரதேச சபை உறுப்பினர் நளீம் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள்களும் கலந்துகொன்டனர்.

(ஸ)