தர்கா நகரில் வடிகான்கள் தோண்டும் பணி ஆரம்பம்!

பேருவளை, தர்கா நகர், ஷெய்க் பாஸி மாவத்தையின் இருபுற வடிகான்களையும் தோண்டும் பணிகள்,  மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்காரின் தலைமையில்  (26) ஆரம்பமானது.

ஏறத்தால 20 வருடங்களுக்குப் பிறகு பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்காரின் முயற்சியினால் இவ்வடிகான்கள் சீரமைக்கும் பணிகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(ன)