Breaking
Sun. Dec 7th, 2025

(முர்ஷிட் கல்குடா)

மட்டுப்படுத்தப்பட்ட மருதமுனை நபா கரை வலை மீனவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (28) மருதமுனை அல்/மதினா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

மீனவர் சங்கத்தின் தலைவர் எஸ்.நபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.

மேலும் பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் மற்றும் மீனவர் சங்கத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

 

 

 

Related Post