Breaking
Sun. Dec 7th, 2025
கல்முனை மாநகர சபை நிதிக்குழுவின்  உறுப்பினர்களாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐந்து பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
கல்முனை மாநகர சபை இரண்டாவது அமர்வு  மாநகர முதல்வர்  சட்டத்தரணி ஏ.எம்.ரகீப் தலைமையில் இன்று காலை (30) 10.30 மணிக்கு  நடை பெற்றது.
கல்முனை மாநகர சபையின் நிலையியற் குழுக்கள் அமைப்பது தொடர்பில் இருந்துவந்த  இழுபறி நிலைக்கு இன்று முடிவுகட்டப்படுள்ளது .
நிதிக்குழுவில் முதல்வர் உட்பட ஆறு உறுப்பினர்கள் அங்கம் வகிக்க வேண்டும். அதன் அடிப்படையில்  ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஆட்சி புரியும் கல்முனை மாநகர சபையில், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஐந்து பேரும்  எதிர்க்கட்சி அங்கத்தவர்களாகும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினரான சி.எம்.முபீத், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன்,பொன்செல்வநாயகம் , சாய்ந்தமருது சுயேச்சை குழு உறுப்பினர்களான அசீம் மற்றும் ரஸ்மீர் ஆகியோரே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Related Post