மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு! அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான பாயிஸின் ஏற்பாட்டில், இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கொழும்பு ஹம்சா வித்தியாலயத்தில் நேற்று மாலை (30) இடம்பெற்ற இந்த இப்தார் நிகழ்வில், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன்,  மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ரம்ஸி உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.