Breaking
Mon. Dec 8th, 2025

அக்குரனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், நீண்டகால அரசியல்வாதியும் பிரபல சமுக சேவகருமான அல்ஹாஜ் ஷகூர் மற்றும் பிரபல சமுக சேவையாளரும், முன்னணி அரசியல் கட்சியொன்றின் ஆதரவாளருமான சப்வான்  நேற்று (04) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டனர்.

மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான  ஹம்ஜாட், கண்டி மாவட்ட இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸதீன், மக்கள் காங்கிரஸின் அக்குரனை கிளை அமைப்பாளர் இல்யாஸ், அக்குரனை பிரதேச சபை உறுப்பினர் இஸ்வி ஆகியோர் முன்னிலையிலேயே, இவர்கள் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.

(ன)

 

 

Related Post