Breaking
Tue. Dec 9th, 2025

கண்டி மாவட்டத்தின் உடுநுவர தேர்தல் தொகுதியில், ரகுபத்த கிராமத்துக்கு செல்லும் கெனல் வீதியில் அமைந்திருக்கும் பாலம் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்து காணப்படுகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உடுநுவர பிரதேச சபை உறுப்பினர் நஸார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஹனீபா மற்றும் நஜீம் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, உடுநுவர பிரதேச சபையின் தவிசாளர் காமினி தென்னகோன் சேதமடைந்திருக்கும் பாலத்தை அண்மையில் பார்வையிட்டார். அத்துடன் சேதத்துக்குள்ளாகியிருக்கும் பாலத்தை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகளை வெகு விரைவில் மேற்கொள்வதாகவும் அவர் வாக்குறுதியளித்தார்.

(ன)

 

 

Related Post