இலங்கையிலிருந்து இவ்வருடம் ஹஜ் சென்றவர்களின் கவனத்திற்கு..!

ஏ.எஸ்.எம்.ஜாவித் 
  
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களதில் பதிவுசெய்யப்பட்ட ஹஜ் முகவர் நிலையங்களினூடாக இவ்வருடம் (2014ஆம் ஆண்டு) ஹஜ் கடமைகளை மேற்கொண்டவர்கள் தாங்கள் பயணித்த முகவர்கள் தொடர்பான ஆலோசனைகள், கருத்துக்கள் அல்லது முறைப்பாடுகள் இருப்பின் அவை தொடர்பான விபரங்களை பதிவுத் தபால் மூலம்
‘பணிப்பாளர்’
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,
இலக்கம் 180,
டீ.பி. ஜாயா மாவத்தை,
கொழும்பு – 10
என்ற முகவரிக்கு 2014.11.30ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் கேட்டுக்கொள்கின்றார்.