Breaking
Fri. Dec 5th, 2025
மன்னார் பிரதேசபைக்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் 5ம் தர மாணவர்கள் எழுத இருக்கும் புலமைப்பரிசில் பரீட்சையில் திறமையான சித்திகளை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் மன்னார் பிரதேசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் அவர்கள் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் நோக்கில் இன்று இலவச கருத்தரங்கை நடத்தியுள்ளார்..
இந்த இலவச கருத்தரங்கில் மன்னார் பிரதேசபைக்குட்பட்ட பாடசாலைகளில் கல்விபயிலும் 450 மாணவர்கள் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தவிசாளர் எதிர்வரும் காலங்களில் இந்தப்பிரதேசத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் உதவியுடன் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து செய்யப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்…
இந்த நிகழ்வில் மன்னார் பிரதேசபை உறுப்பினர்களும் அகில  இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்களும்.பிரதேச நலன் விரும்பிகளும் கலந்துகொண்டனர்….

Related Post