Breaking
Fri. Dec 5th, 2025

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் இன்று (25) அதிகாலை மலேசியா கோலாலம்பூர் பயணமானார்.

இன்று காலை கோலாலம்பூரில் மலேசிய இஸ்லாம் சே கட்சியின் தலைவர் டட்டோ சிறீ துவான் குரு ஹாஜி அப்துல் ஹாதி பின் அவாங் தலைமையில் கோலாலம்பூர் ஜலான் ரஜா லோட் இல் ஆரம்பமாகும் உயர்மட்ட மாநாடு ஒன்றில் அமைச்சர்  அதிதியாக கலந்துகொள்கின்றார்.

அதன் பின்னர் கோலாலம்பூர் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறும் Global Leadership Award 2018 நிகழ்விலும் அமைச்சர் அதிதியாகப் பங்கேற்கின்றார்.

நாளை காலை (26) வியாழக் கிழமை மலேசியாவில் அந்நாட்டின் சர்வதேச வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் வை.பி.இக்னேசஸ் டெரல் லீக்கிங் இற்கும் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறுகின்றது. இந்த சந்திப்பின் போது மலேசியாவுக்கும் – இலங்கைக்கிடையிலான பரஸ்பர நட்புறவு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தல் தொடர்பில் ஆராயப்படவுள்ளன.

ஊடகப்பிரிவு-

 

Related Post