Breaking
Sat. Dec 6th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்  வியாழக்கிழமை அன்று விருதோடை கிராம சேவகர் அலுவலகத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

அதன்போது அங்குள்ள அலுவலகம் குறைபாடுகளுடன் காணப்பட்டதுடன், மக்கள் பாவனைகளின் போது அசௌகரியங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களை அதிகமாகக்கொண்டதாகவும் காணப்பட்டது.

இதனை அவதானித்து உடனே கிராம சேவகருடன் கலந்துரையாடி, தனது சொந்த நிதியில் கடந்த வெள்ளிக்கிழமை (03) அக்குறைபாடுகளை மக்களின் நலன் கருதி நிவர்த்தி செய்து கொடுத்தார்.

அத்தோடு “எதிர்வரும் நாட்களில் புதிய கிராம சேவகர் காரியாலயம் ஒன்றை அமைப்பதற்காக தன்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன்” எனவும் வாக்குறுதியளித்தார்.

(ப)

Related Post