Breaking
Sat. Dec 6th, 2025

கிண்ணியா, T/K/T.B. ஜாயா வித்தியாலயத்த்துக்கு   அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தளபாடங்களை வழங்கி வைத்தார்.

பாடசாலையின் கோரிக்கைக்கிணங்க, இன்று காலை (06) பாடசாலை அதிபர் முஸம்மிலிடம், தளபாடங்கள் கையளிக்கப்பட்டது.

அத்துடன், பாடசாலையின் அபிவிருத்தி விடயங்கள் மற்றும் கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் பாடசாலையின்  அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ஆகியோருடனும் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி கலந்துரையாடினார்.

(ன)

 

Related Post