உயர்நீதிமன்ற விளக்கத்தை ஏற்கத் தயாரில்லை – ஜே.வி.பி.

ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது முறையாகவும் ஜனாதி பதித் தேர்தலில் போட்டியிட முடியுமென உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள சட்ட வியாக்கியானத்தை ஏற்க முடியாதென திட்டவட்டமாக நேற்று அறிவித்தது ஜே.வி.பி.

அத்துடன், சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு மஹிந்த முன்னெடுக் கும் நடவடிக்கைகளைத் தோற்கடிப்பதற்கு ஜே.வி.பி. நடவடிக்கை எடுக்கும் என்றும் இதன் ஓரங்கமாக எதிர்வரும் 18ஆம் திகதி கொழும்பில் மாபெரும் எதிர்ப்புப் பேரணியை தமது கட்சி நடத்தும் என்றும் ஜே.வி.பியின் பொதுச் செய லாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
பத்தரமுல்லை பெலவத்தையி லுள்ள ஜே.வி.பி. தலைமைச் செயல கத்தில் நேற்று நடைபெற்ற செய்தியா ளர் மாநாட்டின்போது உயர் நீதிமன் றின் சட்ட வியாக்கியானம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:-

அரசமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தான் மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏதேனும் சட்டச்சிக் கல் உள்ளதா என்றும் நான்கு வருடங் களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியுமா என்றும் உயர் நீதிமன்றத் திடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ விளக்கம் கேட்டிருந்தார்.

இது தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள சட்ட விளக்கத்தை ஜே.வி.பி. ஏற்காது. ஒருதலைபட்ச மான முறையிலேயே விசாரணைகள் இடம்பெற்றன. அதாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ மூன்றாவது முறை யாகவும் போட்டியிடுவதற்கு உள்ள சட்டச்சிக்கல்களைத் தெளிவுபடுத் துவதற்கு எதிர்த்தரப்பினருக்கு உரிய காலஅவகாசம் வழங்கப்படவில்லை. நன்கு திட்டமிட்ட அடிப்படையிலேயே இது விடயத்தில் ஜனாதிபதி காய் நகர்த்தல்களை மேற்கொண்டுள்ளார்.
தனக்கேற்றாற்போல் ஒரு முடிவை பெறுவதற்கு அரசியல் விளையாட்டை பயன்படுத்தியுள்ளார். எனவே, மாற் றுத் தரப்புகளுக்கு உரிய காலஅவ காசம் வழங்கப்படாது அவசரமாக வழங்கப்பட்டுள்ள இந்த விளக்கத்தை ஏற்கமுடியாது. நான் நீதிமன்றத்தை விமர்சிக்கவில்லை. எனினும், நீதித்து றையின் கட்டமைப்பு மஹிந்தவின் ஆட்சிக்குக் கீழேயே இருக்கின்றது.

முன்னாள் பிரதம நீதியரசரை நீக்கிவிட்டு தனக்குரியவர்களை அவர் நியமித்து தனக்குத் தேவையான தீர்ப்புகளை நீதிமன்றத்தின் ஊடாக பெற முயற்சிக்கின்றார். அந்த வகை யில் ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது முறையாக போட்டியிட்டால் அது சட்டவி ரோதத் தேர்தலாகவே அமையும். அத்தோடு, நான்கு வருடங்களில் தேர்தல் நடத்தப்பட்டால் அதுவும் சட்ட விரோதமாகவே அமையும். எனவே, சட்டவிரோதமான தேர்தலைத் தடுத்து நிறுத்துவதற்கு ஜே.வி.பி. சகல நட வடிக்கைகளிலும் இறங்கும்.

இதன் ஓர் அங்கமாக கொழும்பில் எதிர்வரும் 18ஆம் திகதி மாபெரும் எதிர்ப்புப் பேரணியை நடத்தவுள் ளோம். அதேவேளை, சட்டவிரோத ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது குறித்து ஜே.வி.பி. ஆழமாக சிந்திப்ப தால் பொது வேட்பாளர் விவகாரம் குறித்து தற்போது எம்மால் கருத்துக் கூறமுடியாது.

சட்டவிரோதத் தேர்தலை நடத்துவ தைத் தடுப்பதற்கு அனைத்து மக்க ளும் ஒன்றுசேரவேண்டும் ‡ என்றும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.