பேலியகொட சந்தியில் துப்பாக்கிச் சூடு

பேலியகொட – நுகேவீதி சந்தியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர்  முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் காலி பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவர் சிறு சிறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.