மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கல்வி எனும் அழியாச் செல்வத்தினை  மாணவர்களிடையே மெருகூட்டும் ஓர் அங்கமாக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம் நௌஷாட்டின் வேண்டுகோளின் பேரில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அனுசரணையில் வசதி குறைந்த மற்றும் மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்  கடந்த 27 – 08- 2018 அன்று வழங்கி வைக்கப்பட்டன.

 அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ஏ.சீ.எம்.சஹீல் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர் என். கோவிந்தசாமி, சமூக சேவையாளர் ஏ. யாஸ்தீன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள்  உட்பட அதிபர், ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.