கல்கமுவ அல் /அஸ்ஹர் பள்ளிவாசலுக்கு கதிரைகள் வழங்கிவைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், கல்கமுவ மஸ்ஜிதுல் அஸ்ஹர் ஜூம்ஆ பள்ளிக்கு பிளாஸ்டிக் கதிரைகளை வழங்கிவைக்கும் நிகழ்வு, நேற்று முன்தினம் (04) முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான எம்.என்.நஸீரின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், குளியாப்பிட்டிய பிரதேச சபை பிரதித்தவிசாளர் எம்.சி.இர்பான், பிரதேசசபை உறுப்பினர் எம்.ஐ.எம்.ஸபீர், கல்கமுவ தொகுதி அமைப்பாளர் பத்ர் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், கல்கமுவ பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.