இலங்கையில் இந்தியாவின் பாரிய ஹோட்டல் முதலீடு ஆரம்பம்!

காலிமுகத்திடலில் ஐரிசி என்ற இந்த ஹோட்டல் மற்றும் குடியிருப்பு தொகுதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இதன்போது அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் ஐரிசியின் தலைவர் வை.சி. தேவசேகர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இதுவே குறித்த ஹோட்டல் இந்தியாவுக்கு வெளியில் மேற்கொள்ளும் முதலாவது ஹோட்டல் திட்டமாகவுள்ளது.

ஏற்கனவே ஐரிசிக்கு இந்தியாவின் பல இடங்களிலும் 100 ஹோட்டல்கள் செயற்பட்டு வருகின்றன.

ஐரிசியின் வருடாந்த வருமானம் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது