மின்சார இணைப்புக்கான பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு!

கொழும்பு பிரதேசத்தில் பாடசாலை செல்லும் சிறுவர்கள் உள்ள வறிய குடும்பங்களின் வீடுகளுக்கு மின்சார இணைப்பை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு இன்று (29) இடம்பெற்றது. 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும். மேல் மாகாண சபை உறுப்பினருமான ஏ.ஜெ.எம்.பாயிஸ்  அவர்களின் தலைமையில், கொழும்பு பிரதான கட்சிக்  காரியாலயத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு, மின்சார இணைப்புக்கான பத்திரங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இதன்போது, மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட முக்கியஸ்தர்கள் உட்பட பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

(ன)