Breaking
Fri. Dec 5th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், பொத்துவில் அல்/ஹிஜ்ரா வித்தியாலத்திற்கான நவீன வசதிகளுடன் கூடிய புதிய இரண்டு மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று (05) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி SMM. இஸ்மாயில் பிரதம அதியாகவும், கெளரவ அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் மெளலவி AM.ரஹ்மதுல்லாஹ், உபவலயக் கல்விப் பணிப்பாளர் N. வஹாப், கோட்டக்கல்விப் பணிப்பாளர் MAM. புஹாரி ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் SSP மஜீத், கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஹம்மத் முஸாரஃப் முதுநபீன், பிரதேசசபை உறுப்பினர்களான AMM. தாஜுதீன், NH. முனாஸ், AP. சதகத்துல்லாஹ், ஆயிஷா பீவி, கட்சியின் செயற்பாட்டாளர்களான MM. பாயிஸ், மனாப் மற்றும் பெருமளவான கட்சி ஆதரவாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

(ன)

 

 

Related Post