Breaking
Fri. Dec 5th, 2025

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலின் முயற்சியினால், முதல் கட்டமாக சம்மாந்துறையில் வறிய கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளஷாட், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இஸ்மாயில் எம்.பி இங்கு உரையாற்றும் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் எமது மண்ணுக்கு கிடைத்த பிரதிநிதித்துவத்தை பயன்படுத்தி வீதி,சுகாதார, விளையாட்டு,கல்வி உள்ளிட்ட இன்னும் பல அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு  தன்னால் இயன்றவரை  சேவையாற்றுவேன் என்று குறிப்பிட்டார்.

மேலும், இம்மாத இறுதியில் இரண்டாம் கட்டமாக வறிய குடும்பங்களுக்கு 250 குடிநீர் இணைப்பு வசதி மற்றும் 250 மின் இணைப்பு வசதிகளும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

(ன)

Related Post