Breaking
Mon. Apr 29th, 2024

அதிகமாக முச்சக்கர வண்டிகளை பயணத்திற்காக நமது பெண்களே பயன்படுத்துகின்றனர் அந்தவகையில் நமது பெண் பிள்ளைகளை பாடசாலைகளைக்கும் மாலை நேர வகுப்புக்களுக்கும் முச்சக்கர வண்டிகளில் உங்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களின் பெற்றோர்கள் அனுப்புகின்றனர், அந்தவகையில் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பு கூற வேண்டியவர்களாக தங்களின் பிள்ளைகள் போல பொறுப்புணர்வுடன் நடாத்துவது ஒவ்வொரு சாரதியின் மீதும் கட்டாயமாகும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார்.

எம்.எம். தாஜூடீன் அவர்களின் தலைமையில் இன்று(7) நடைபெற்ற நிந்தவூர் (பழைய) தியட்டரடி முச்சக்கர வண்டித் தரிப்பிட திறப்புவிழாவில் அதிதியாக கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் குறித்த தரிப்பிடத்தையும் அதன் சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்திருப்பதோடு ஏனைய முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்களோடு புரிந்துணர்வோடும் சகோதரத்துவத்தோடும் பழக வேண்டும்.

ஏழை எளிய மக்களுக்களிடம் குறைந்த கட்டணங்களை பெற்றுக்கொள்வதோடு சமூக உணர்வுடனும் மனித நேயத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்.

அது மட்டுமின்றி இரவு பகல் பாராது உங்களுடைய பணிகளில் ஈடுபடுகின்றீர்கள் அதன்போது ஊரின் பாதுகாப்பு மற்றும் நமது இளைஞர் யுவதிகளின் ஒழுக்க விடயங்கள் போன்றவற்றில் கவனத்துடனும் அக்கறையுடனும் செயற்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

இன்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான ஏ.அஸ்பர், எம்.எல்.ஏ மஜீத், சமூக ஆர்வலர் ஜாபீர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

-எம்.ஏ.எம் முர்ஷித்-

Related Post