பேசாலை வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின்  7,100,000.00 ரூபாய் நிதியொதுக்கீட்டில்  பேசாலை வீதிக்கு காபட் இடும் பணிகள், மன்னார் பிரதேச சபைத் தவிசாளர்  எஸ்.எச்.எம்.முஜாஹிரினால் நேற்று (26) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேசாலை பிரதேச சபை உறுப்பினர் டிப்னா குரூஸ், பிரதேச சபை உறுப்பினர் சிலுவை பீரிஸ் ஐயா, வெற்றிமாதா பங்குதந்தை அவர்களும்,மன்னார் பொலிஸ் அதிகாரி (OIC),  பிரதேச சபை உறுப்பினர் றாசிக், இணைப்பளர் முசம்மில் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.