Breaking
Fri. Dec 5th, 2025

கடந்த 2 வருடங்களாக இழுபறியில் இருந்த அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் தேசிய பாடசாலை விவகாரம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை அமைப்பாளர் ஹசனலி சேர் அவர்களினால் முதல் முதலாக கொண்டு செல்லப்பட்ட தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தும் செயற்திட்டங்கள் இதுவரை காலமும் தட்டிகளிக்கப்பட்ட நிலையில் கடந்த தினங்களில் முன்னாள் கௌரவ. ஆளுனர் ரோகித போகல்லாகம அவரக்ளும் , சம்மாந்துறை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில் அவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இதற்க்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இன்று தேசிய பாடசாலையாக எமது பிராந்தியத்தில் பெண்களுக்கென தனித்துவத்தை எடுத்துக்காட்டும் பாடசாலையாக அல் மர்ஜான் பாடசாலை திகழ்கிறது. இதற்காக பல முயற்சிகளை எடுத்த வீசி இஸ்மாயில் அவர்களுக்கு எமது முழு சம்மாந்துறை சமூகம் சார்பாக வாழ்த்துகிறோம் .

இதனை சட்டரீதியாக அறிவிப்பு செய்யுமுகமாக இம்மாத இறுதியில் தற்போதய கிழக்கு ஆளுனர் கௌரவ. கலாநிதி ஹிஸ்புல்லா சம்மாந்துறை மண்ணுக்கு தனது கன்னி விஜயத்தினை மேற்கொள்ள என்னியுள்ளார். இதன் போது பாரிய நடமாடும் சேவை ஒன்றும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்ட எமது மண்ணின் பிதாமகனான பாராளுமன்ற உறுப்பினர் வீசி இஸ்மாயில் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம்.

Related Post