Breaking
Sat. Dec 6th, 2025
கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் அம்பாரை மாவட்டத்திலுள்ள 20 உள்ளூராட்சி சபைகளினதும் தவிசாளர்களுக்குமான சந்திப்பு ஒன்று அண்மையில் (18.01.2019) அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது கலந்துகொண்ட நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், முன்பள்ளி பாடசாலைகளை சபைகளின் அதிகாரத்தின் கீழ் முறைப்படுத்தி முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள வசதிகளையும் சரிவர ஏற்படுத்திக் கொடுத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை ஆளுனரிடம் முன்வைத்தார்.
அவற்றை உள்வாங்கிக் கொண்ட ஆளுனர் இன்று ;
முன்பள்ளி ஆசிரியர்களின் மாதாந்த சம்பளத்தினை 3000ரூபா முதல் 4000 ரூபா வரை உயர்த்தி வழங்க கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கமைவாக எதிர்வரும் மார்ச் மாதத்தின் முதலாம் திகதியிலிருந்து இவ் முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் 4000 ரூபாவாக உயர்த்தி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, தமது கோரிக்கைகளை உள்வாங்கிக் கொண்டு செயற்படுத்திய கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் அவர்கள் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Related Post