Breaking
Fri. Dec 5th, 2025

மெடிவெலகெதர அல் -அக்ஸா விளையாட்டு கலகம் நடாத்திய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாபெரும் வெற்றிக் கிண்ணம் நேற்று (20-02-2019) மெடிவெலகெதர அல் – பதுரிய்யா முஸ்லிம் வித்தியாளய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதமஅதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்டத் தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவருமான என்.எம்.நஸீர் (MA) கலந்து கொண்டார்.

22 க்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்கள் பங்கு கொண்ட இப்போட்டியில் பெந்தனிகொட PYC அணியுடன் மோதி ஹொரம்பாவ லயன்ஸ் அணி வெற்றிக் கிண்ணத்தை தட்டிக் கொண்டது.

பிரதேசசபை வேட்பாளர் ரஸீஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குளியாப்பிடிய பிரதேசசபை உப தவிசாளர் எம்.சி. இர்பான், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்ட கல்வி பொருப்பாளர் ரியாஸ் (அஸ்ஹரி) குருநாகல் மாவட்ட உலமா காங்கிஸ் அமைப்பாளர் ஸரூக் மௌலவி, அமைச்சின் குருநாகல் மாவட்ட இனைப்பாளர் அலி மேயர், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் ஊர் மக்கள் விளையாட்டுக் கழகங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

Related Post