Breaking
Sat. Dec 6th, 2025

நீண்ட காலமாக நிலவி வரும் விலாலோடை அணைக்கட்டு தொடர்பான பிரச்சினையை ஆராயும் பொருட்டு விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எஸ்.எஸ்.எஸ்.அமீர் அலி இன்று 20.04.2019ம் திகதி சனிக்கிழமை குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.

இவ்விஜயத்தின் போது அணைக்கட்டினை நிர்மாணிப்பதற்கான திட்டயறிக்கையை மேற்கொள்ளுமாறு மாவட்ட நீர்ப்பாசன பொறியியளார் எம்.அஸ்ஹருக்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்தார். இதனடிப்படையில், ஒரு மாத காலத்திற்குள் அறிக்கையினைச் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கையெடுப்பதாக இராஜாங்க அமைச்சரிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

திட்டறிக்கை கிடைக்கப்பெற்றதும், இதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் அமீர் அலி விவசாயிகளிடம் குறிப்பிட்டார்.

இவ்விஜயத்தில் பிரதேச விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Related Post