Breaking
Sat. Dec 6th, 2025
ஆலயங்கள் புனிதமான இடங்கள் மனநிம்மதிக்காகவும் அமைதிக்காகவும் ஒன்றுகூடும்இத்தகைய புனித தலங்களில் மனித உயிர்களை வேட்டையாடும் காட்டுமிராண்டித் தனங்களை மிகவன்மையாகக்  கண்டிக்கின்றேன்.இவ்வாறு மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதங்களால் எதையுமே சாதிக்க முடியாது.மதத்தலங்களுக்குள் மனிதநேயமும் கருணையும் தொலைக்கப்படுவது.மனித நாகரீகத்திற்கு அப்பாற்பட்டது.அப்பாவிக மக்கள் கொத்துக்கொத்தாய் கொடூரமான முறையில் பலியாவதன்மூலம் கொலையாளிகள் எதனையும் அடைய முடியாது.
இன்றையநாள் கத்தோலிக்க சகோதரர்களின் பண்டிகை நாள் .ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடி அதன் ஆராதனையில் இருந்த வேளையில் இவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் அட்டகாசம் புரிவதை மனித சமுகம் மன்னிக்காது.
இந்த நாட்டின் வரலாற்றில் இன்றைய நாள்  கறைபடிந்த நாளாகும்.உயிரிழந்த அனைவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Related Post