Breaking
Sat. May 4th, 2024
பிரதமர் ரணில் விக்ரமசிங்க திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளதை அடுத்து பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகள் கொண்ட பாதுகாப்பு குழுவினர் குறித்த இடங்களை பார்வையிட்டார்கள்.
பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தலைமையில் குறித்த அபிவிருத்தி செய்யப்படவுள்ள இடங்களே இவ்வாறு இன்று (19)பார்வையிடப்பட்டது
I PROJECT(ஐபிரஜெக்ட்) திட்டம் ஊடாக வீதிகள் காபட் இடுவதற்கான அங்குரார்ப்பண வைபவம் இடம் பெறவுள்ளது
எதிர்வரும் 24 /08/2019 அன்று சனிக்கிழமை பிரதமர் திருகோணமலைக்கு விஜயம் செய்து பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார். திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதி 30 கிலோ மீற்றர்,கந்தளாய் சீனி தொழிற்சாலை வீதி 07 கிலோ மீற்றர், பாலத்தோப்பூர் பள்ளிக் குடியிருப்பு வீதி 07 கிலோ மீற்றர் போன்ற  வீதிகள் காபட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது
இது தொடர்பான ஆரம்ப ஏற்பாடுகளை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தலைமையில் உரிய இடங்கள் பார்வையிடப்பட்டன
இதில் பிரதமர் அலுவலகத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் திருமதி ஜேசுதாசன், ஐபிரஜெக்ட் திட்ட பொறியியலாளர் சுரேந்திர குமார் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.

Related Post