Breaking
Sat. Dec 6th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் காரியாலயத்தில் 2019/10/17 நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புத்தளம் நகர சபைக்கு உட்பட்ட நிகழ்ச்சி நிரலில்….!

எதிர் வரும் இம்மாதம் 23ம் திகதி ஐக்கிய தேசிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாஷ அவர்கள் புத்தளம் வருகை தர இருப்பதால்…!

அந்த நிகழ்ச்சி நிரலை எவ்வாறு கையாள வேண்டும் என்ற தொனிப்பொருளில் இந்த ஆலோசனை கூட்டம் இடம்பெற்றது…!

இந்நிகழ்வில் ACMC புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் கூறுகையில்…!

நமது சமூகத்தின் நலன் கருதியே நாம் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அன்ன சின்னத்திற்கு வாக்களிக்க ஆதரவளிக்க தள்ளப்பட்டுள்ளோம்…!

இதுவே நிதர்சனமான உண்மை…!
எமது சமுகத்தை பாதுகாக்கும் தார்மீக பொறுப்பும் கடமையும் எமக்குள்ளது…!
அதனை நேர்மையாக கையாள வேண்டும்…!
எமது சமூகத்தின் தேசிய பாதுகாப்புக்காக ஒற்றுமையோடு பயணித்து ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாஷ அவர்களை வெல்ல வைப்போம்…!

என அந்நிகழ்வில் ACMC புத்தள மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் கூறினார்…!

Related Post