Breaking
Mon. Apr 29th, 2024
கடந்த மஹிந்த ராஜபக்சக்களின் ஆட்சிக் காலத்தில் அண்ணன் மஹிந்த கோத்தபாய பஷில்ராஜபக்ஸ போன்றோர்களே நாட்டை கொடூரமான ஆட்சிக்கு இட்டுச் சென்றுள்ளார்கள் மீண்டும் இவர்களுக்கு ஏன் இந்த அதிகார மோகம் பிடித்துள்ளது .
பொருளாதார ரீதியாகவும் சிறுபான்மையினரின் உரிமைகளையும் நாசமாக்கிய அண்ணன் ,தம்பிகளுக்கு மீண்டும் வாக்களித்து நாட்டை கொடுக்க முடியாது என பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்
தோப்பூரில் இன்று (13) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரித்து இடம் பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த கால ஆட்சியில் முஸ்லிம்களின் புனிதமான றமழான் காலத்தில் கிண்ணியாவில் பயங்கரமான கிறிஸ் பூதத்தை உருவாக்கி மக்கள் மத்தியில் அச்சநிலையை உருவாக்கிய பிண்ணனியில் கோத்தபாய ராஜபக்ஸவே செயற்பட்டுள்ளார்.
 நோன்பு காலத்தின் போது சஹர் நேரத்திலும் சுபஹ் தொழுகைக்காக சென்ற வேலையிலும் இளைஞர்களை இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடத்திச் சென்று அவர்களை அநியாயமாக சித்திரவதை செய்து 24 இளைஞர்களையும் விடுதலை செய்த மறக்க முடியாத சூழ் நிலையும் கிண்ணியாவில் நடந்தேறியுள்ளது.
 இதற்கான முழுக்காரணமும் இதனுடன் இணைந்த பிண்ணனியும் கோத்தாவே காரணம் இவ்வாறானவர்களே மீண்டும் நாட்டை ஆழ ஆசைப்படுகிறார்கள் பல ஆணைக்குழுக்களை அன்றைய மஹிந்த தரப்பு உருவாக்கியும் அதில் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் நிராகரிக்கப்பட்டதும் பொருளாதாரரீதியாக முஸ்லிம்களின் வியாபார ஸ்தளங்கள் மதஸ்தளங்கள் மதக் கடமைகளை செய்ய இடையூறு விளைவித்த அனைத்து நிகழ்ச்சித்திட்டங்களையும் செய்து விட்டு நாட்டை குட்டி சுவராக்க முற்பட்டோர்களுக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற நினைப்பது மடைமையாகும் .
நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் இவ்வாறான நேரங்களில் சில தலைமைகள் சரியான நேரத்தில் பிழையான முடிவுகளை எடுத்துள்ளார்கள் அதாவுள்ளா,ஹிஸ்புள்ளா,முஸம்மில் நஜீப் ஏ மஜீத் போன்ற அரசியல்வாதிகள் மொட்டுக் கட்சிக்கு ஆதரவளித்து செயற்பட்டதால் கடந்த 2015 ல் படுதோல்வியடைந்தார்கள்.
 இம் முறையும் இவர்கள் தோல்வியடைவார்கள் .நாட்டை சிறப்பாக நிருவாக செய்யக் கூடியதும் ஒரு ஸ்திரமான இன நல்லிணக்க ஆட்சியை உருவாக்க சஜீத் பிரேமதாசவே சிறந்த தலைமைத்துவம் 2025  ம் ஆண்டளவில் 25 இலட்சம் வீடுகளை உருவாக்கவுள்ளார்
அனைவருக்கும் வீடு என்கிற நிலையையும் கொண்டு வருவார் இது போன்று 1994 க்குப் பின்னர் கட்சி ரீதியாக அரசியல்பழிவாங்கல் செய்யப்பட்ட பல்வேறு சுமார் ஆறு இலட்சம் சமுர்த்தி பயனாளிகளை உருவாக்கியதும் சஜீத் பிரேமதாசவே .
பெரும்பான்மை சமூகத்தின் மீதுள்ள நல்ல இன நல்லுறவுகளை சீர்குழைக்கின்ற இனவாதத்தை கக்குகின்ற நாடாளுமன்றத்தின் உள்ளுக்குள் அதுரலிய விமல் உதய கம்மன்பில எஸ்.பி போன்றோர்களும் வெளியில் ஞானசார போன்றவர்களும் இனவாத அமைப்புக்களாக பொதுபலசேனா, இராவணபலய போன்றன அன்றைய 2013 தொடக்கம் 2015 வரை நாட்டில் அரங்கேற்றிய அராஜகங்களையும் எம்மால் மறுக்க முடியாது
முஸ்லிம்களை நிம்மதியாக வாழ வைக்க முடியாமல் அண்ணன் தம்பிகள் கொடூரமான முறையில் பல இனவாத ஏர்ஜன்ட்டுகளை வைத்து நாட்டை ஆட்சி செய்தார்கள்.
எங்களது மத்ரஸாக்களை ஷரிஆவை பாதுகாக்க முடியாமல் போன மஹிந்த அரசை நாம் எப்படி வீட்டுக்கு அனுப்பினோமோ அதே போன்றே இம் முறையும் கோத்தாவை வீட்டுக்கு அனுப்பி விட்டு ஒரு நல்லிணக்க ஆட்சியை உருவாக்க அன்னம் சின்னத்திற்கு வாக்களித்து புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவோம் என்றார்.

Related Post