Breaking
Fri. Dec 5th, 2025

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பதிவு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்கள் மற்றும் சங்கங்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

குறித்த நிகழ்வானது நேற்று (24) குச்சவெளி பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலாளர் தனேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றுள்ளது.

இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னால் துறை முகங்கள் கப்பற் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஃறூப் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து   பாராளுமன்ற உறுப்பினரால் உரிய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

26 விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் 06 சங்கங்களுக்கான தளபாடங்களும் இதன் போது வழங்கப்பட்டுள்ளன.

இதில் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்களான சர்மியா,ரொசானா,பர்சானா உட்பட விளையாட்டு கழக இளைஞர் யுவதிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

Related Post